சீனப்படையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை நனவாக்குவோம்:ஷி ச்சின்பிங்
2022-10-24 21:50:00

சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் 24ஆம் நாள் பிற்பகல் சீன இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் எழுச்சியைப் அனைத்து படை வீரர்களும் அதிகாரிகளும் உணர்வுப்பூர்வமாகக் கற்றுக்கொண்டு, சீனப்படையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை நனவாக்கப் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிந்திய 5 ஆண்டுகளில் சீனாவின் தேசிய பாதுகாப்புத் துறையிலும் ராணுவக் கட்டுமானத்திலும் மாபெரும் முன்னேற்றங்களும் சீர்த்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்டப்படி, சீனப்படையின் நூற்றாண்டு இலக்கை நனவாக்கி, சீன ராணுவத்தை உலகில் முதல் தர ராணுவமாகக் கட்டியமைப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

சீன அரசவை உறுப்பினரும் பாதுகாப்பமைச்சருமான வேய் ஃபங்ஹேவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.