தரமிக்க வளர்ச்சி சீனாவின் நவீனமயமாக்கலின் முதன்மை கடமை
2022-10-24 15:53:15

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டிற்கான அறிக்கை பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அக்டோபர் 24ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த றிக்கையில், நவீனமயமாக்க சோஷலிச நாட்டை பன்முகங்களிலும் கட்டியமைப்பதன் முதன்மை கடமையாக, தரமிக்க வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி சீர்திருத்த பணியகத்தின் அதிகாரி மு ஹொங் 24ஆம் நாள் தெரிவித்தார். மேலும், தரமிக்க வளர்ச்சியை முன்னேற்றுவது பற்றிய நெடுநோக்கு திட்டமும் இவ்வறிக்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீன வளர்ச்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்க இது துணைபுரியும் என்றும் அவர் தெரித்தார்.

தவிர, அனைவருக்குமான பொதுச் செழிப்பை நனவாக்குவதற்கு ஒரு நீண்டகாலம் தேவைப்படுகிறது. இந்த இலக்கை நனவாக்க அவசரமாகவோ அல்லது தாமதமாகவோ செயல்படக் கூடாது என்று சீனக் கம்யூனிஸ் கட்சி மத்திய கமிட்டி கொள்கை ஆய்வகத்தின் தலைவர் ஜியாங் ஜுன் சுவன் தெரிவித்தார்.

சீனா இன்னும் வளரும் நாடு என்ற உண்மை நிலைமையைக் கருதி செயல்பட வேண்டும் என்றும், உரிய நடவடிக்கைகளை எடுத்து, ஆக்கப்பூர்வமாக நிலைமைகளை உருவாக்கி, வருமான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.