ரஷிய-அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் தொடர்பு
2022-10-25 14:21:27

ரஷிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் 23ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, அன்று ரஷிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி ஷோய்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டினுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். கடந்த சில நாட்களில் இருதரப்பினரும் உக்ரைன் நிலைமை குறித்து நடத்திய 2ஆவது பேச்சுவார்த்தை இதுவாகும்.

உக்ரைன் கதிரியக்க வெடிகுண்டுகளைப் பயன்படுத்த வாய்ப்புண்டு என்ற ரஷியாவின் குற்றஞ்சாட்டு பற்றி, நிபுணர்களை அனுப்பி இதை தெளிவு செய்யுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார். 24ஆம் நாள் இந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் க்ரோஸியுடன் தொடர்பு கொண்ட போது குலேபா இதைத் தெரிவித்தார்.