பிரிட்டன் தலைமையமைச்சராகப் பதவி ஏற்க உள்ள ரிஷி சுனக்
2022-10-25 14:10:55

பிரிட்டனின் முன்னாள் நிதி துறை அமைச்சர் ரிஷி சுனக் அக்டோபர் 24ஆம் நாள், ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டன் மன்னரின் ஒப்புதலுடன், அவர் பிரிட்டன் தலைமையமைச்சராகப் பதவி ஏற்கவுள்ளார்.

வேட்பாளர் பரிந்துரைக்கான காலவரம்புக்குள், ரிஷி சுனக் மட்டுமே, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேலான கீழ் அவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றார். இந்நிலையில், புதிய கட்சித் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் தகுநிலையை அவர் பெற்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.