பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி போடுதல் நடவடிக்கை
2022-10-25 15:17:48

உடல் இயலாமையை உண்டாக்கும் போலியோ நோயை அகற்றும் விதம், பாகிஸ்தானில் இந்நோய்க்கு எதிரான தடுப்பூசி போடுதல் நடவடிக்கை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

நாடளவில் ஒரு வாரம் தொடரும் இந்நடவடிக்கையில், 5 வயதுக்குட்பட்ட பல பத்து இலட்சமான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவைத் துறை அமைச்சர் அப்துல் காதிர் படேல் கூறினார். மேலும், போலியோ இல்லாத நாட்டை உருவாக்க ஒத்துழைக்குமாறு அவர் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குழந்தைகளின் மீதான சிறப்பு கவனத்துடன், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் அந்நாட்டின் 4 மாநிலங்களில் குழந்தைகளுக்குத் தடுப்பூசியைச் செலுத்த உள்ளனர்.