ஒரே சீனா என்ற கோட்பாடு அசைக்கப்பட முடியாது:சீனா
2022-10-25 17:41:49

ஐ.நா. பொது பேரவையின் 2758ஆவது தீர்மானத்துக்குச் சவால்விட அனுமதிக்காது. ஒரே சீனா என்ற கோட்பாடு அசைக்கப்பட முடியாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் அக்டோபர் 25ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

1971ஆம் ஆண்டில் நடைபெற்ற 26ஆவது ஐ.நா. பொது பேரவையில் 2758ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் படி, சீன மக்கள் குடியரசு அரசின் பிரதிநிதி ஐ.நா.வில் சீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சட்டபூர்வமான பிரதிநிதியாவார். தவிரவும், தைவான் அதிகார வட்டாரத்தின் பிரதிநிதி ஐ.நா.வில் சட்டவிரோதமாகக் கைப்பற்றிய இருக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று வாங் வென்பின் கூறினார்.