உலக நிர்வாகத்தில் சீனாவின் பங்கு பற்றி வெளிநாட்டு பிரமுகர்கள் பாராட்டு
2022-10-25 10:07:35

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையில், மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா பாடுபட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உலக நிர்வாகத்தில் சீனா தொடர்ந்து ஞானம் மற்றும் ஆற்றலை வழங்க வேண்டும் என்று பல நாடுகளின் பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்திய ஊடக விமர்சகர் குல்கர்னி கூறுகையில், மேலாதிக்கம், ஆட்சி எல்லை விரிவுக் கொள்கை ஆகியவற்றில் ஈடுபடாத சீனா, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றவும், பல்வேறு நாடுகளுடன் கூட்டுறவை உருவாக்கவும் விரும்புவதாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய முன்னெடுப்புகளையும் அவர் முன்வைத்தார். எனவே, அவரது தலைமையில் சீனா தொடர்ந்து நிலையான மற்றும் சரியான திசையில் முன்னேறும் என நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.

சீன-இத்தாலி ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் கூறுகையில், பன்னாட்டுச் சமூகத்துக்கு அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான வேண்டுகோளை சீனா விடுத்துள்ளது. இது மனிதகுலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.