20வது தேசிய மாநாட்டின் எழுச்சியைக் கற்றுக்கொள்ள மத்திய கமிட்டி நடத்திய கூட்டம்
2022-10-25 19:16:02

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழு, 25ஆம் நாள் கூட்டம் நடத்தி, கட்சி மத்திய கமிட்டியின் மைய மற்றும் ஒருங்கிணைந்த தலைமையை வலுப்படுத்திப் பேணிக்காப்பது பற்றிய விதிகள், கட்சியின் 8 அம்ச சிக்கன ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான விதிகள் முதலியவற்றைப் பரிசீலனை செய்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.