ஏவுத்தளத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்ட மெங்தியன் ஆய்வகப் பகுதி
2022-10-25 15:15:28

சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, மெங்தியன் ஆய்வகப் பகுதி மற்றும் லாங்மார்ச்-5பி ஏவூர்தி, அக்டோபர் 25ஆம் நாள் ஏவுத்தளத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு செயல்திறன் சோதனைகள் திட்டப்படி மேற்கொள்ளப்பட உள்ளன. ஏவுதல் பணி விரைவில் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வென்சாங் ஏவு மையத்தில் பல்வேறு வசதிகள் சீரான நிலையில் உள்ளன. சோதனையில் பங்கெடுக்கும் பிரிவுகள் ஆயத்தப் பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகின்றன.