பிரிட்டனின் புதிய அமைச்சரவை உருவாக்கம்
2022-10-26 10:24:36

பிரிட்டனின் புதிய தலைமை அமைச்சர் ரிஷி சுனக் 25ஆம் நாள் புதிய அமைச்சரவையை அமைத்தார். நிதி, தேசிய பாதுகாப்பு, வெளியுறவு உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் இருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக, புதிய ஆட்சியை அமைக்குமாறு மன்னர் மூன்றாம் சார்லஸ் வழங்கிய அதிகாரத்தை சுனக் ஏற்றுக் கொண்டு, தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள தலைமை அமைச்சர் இல்லத்தில் அவர் உரை நிகழ்த்தினார். கடும் பொருளாதார நெருக்கடியை பிரிட்டன் எதிர்நோக்குகிறது. பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, நம்பிக்கையை மீட்பது புதிய அரசின் முக்கியப் பணியாகும் என்று அவர் தெரிவித்தார். மேலும், கோவிட்-19 பரவல் உள்பட பிரிட்டன் சந்தித்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் பற்றி குறிப்பிட்ட அவர், நாட்டை ஒன்றிணைப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.