இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடக்கம்
2022-10-26 10:29:11

இந்தியாவில் செவ்வாய்கிழமை பிரபல கைபேசி தொடர்பு செயலியான வாட்ஸ்அப் செயலிழந்து, பயனர்கள் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாத சுழல் ஏற்பட்டது.

ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்களில், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதில் உள்ள   சிரமங்களைக் குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டன. மேலும், "WhatsApp Down" என்பது இந்திய அளவில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் டிரெண்டிங் ஹேஷ்டேக் ஆகியது.

இந்திய அரசாங்கத்தின் தரவுகளின்படி, நாட்டில் 55 கோடிக்கும்  அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர்.