தேசிய முதுமைக் கால அடிப்படை காப்புறுதியில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்
2022-10-26 19:08:25

அக்டோபர் 26ஆம் நாள் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டில் சீன மூப்படைதல் இலட்சியத்தின் வளர்ச்சி குறித்த பொது அறிக்கையின் படி, 2021ஆம் ஆண்டின் இறுதி வரை, தேசிய முதுமைக் கால அடிப்படை காப்புறுதியில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 கோடியே 87 இலட்சத்து 10 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டை விட, 3 கோடியே 70 ஆயிரம் அதிகமாகும்.

கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் மூப்படைதல் பிரச்சினை மென்மேலும் தெளிவாகி வருகின்றது. 2021ஆம் ஆண்டின் இறுதி வரை, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான மக்கள் தொகை, 26 கோடியே 73 இலட்சத்து 60 ஆயிரமாகும். இது, மொத்த மக்கள் தொகையில் 18.9 விழுக்காட்டை வகிக்கின்றது. 2021ஆம் ஆண்டின் இறுதி வரை, நாடு முழுவதிலும் முதியோருக்கான பல்வேறு வகையான சேவை நிறுவனங்கள் மற்றும் வசதிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 58 ஆயிரமாகும்.