சீன அரசுத் தலைவருக்கான விரிவான அறிமுகக் கட்டுரை
2022-10-26 17:06:20

சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் 25ஆம் நாள், “புதிய பயணத்தில் சீனாவுக்குத் தலைமை தாங்கும் ஷிச்சின்பிங்”என்ற கட்டுரையை வெளியிட்டது. இக்கட்டுரையில் விரிவான எடுத்துக்காட்டுகள் மூலம், ஷிச்சின்பிங்கின் வளர்ச்சி அனுபவம், குடும்பக் கல்வி, பணி அனுபவம், ஆட்சி சாதனைகள் முதலியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன் அவர் அரசுத் தலைவர் பதவி ஏற்ற பின்பு, கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதைப் பன்முகங்களிலும் வலுப்படுத்தினார். சீனாவின் ஜனநாயகம், முழு நடைமுறையிலான மக்கள் ஜனநாயகம் ஆகும். அதன் மூலம், மக்கள் சந்தித்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். மேலும், மக்கள் அனைவரின் பொது செழுமையை நனவாக்கும் வகையில்,  புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, பசுமை, திறப்பு, பகிர்வு முதலியவை கொண்ட புதிய வளர்ச்சி சிந்தனையை அவர் முன்வைத்தார்.

சர்வதேச அரங்கில், ஷிச்சின்பிங் முன்வைத்த மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகம் என்ற சிந்தனை, ஐ.நாவின் முக்கிய ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. 2035ஆம் ஆண்டு வரை, உலகின் மிக பெரிய வளரும் நாடான சீனா, அடிப்படையாக நவீனமயமாக்கத்தை நனவாக்கும் என்று நம்பப்படுகிறது.

மனித குலப் பொது எதிர்காலச் சமூகச் சிந்தனை மூலம், நிலையான அமைதி, பொதுவான பாதுகாப்பு, கூட்டுச் செழுமை, திறப்பு, பொறுமை முதலியவற்றைத் தழுவிய புதிய பயணம் தொடங்கியுள்ளது என்று இக்கட்டுரையின் இறுதியில் சுட்டிக்காட்டப்பட்டது. 

https://english.news.cn/20221025/385587f560a74705b6a7eb6db49c7f41/c.html