இந்தியாவில் பகுதியான சூரிய கிரகணம் காணப்பட்டது
2022-10-26 11:20:59

இந்தியாவின் பல இடங்களில் பகுதியான சூரிக கிரகணம் 25ஆம் நாள் செவ்வாய்கிழமை காணப்பட்டது. இந்த வானியல் நிகழ்வைப் பற்றி இந்திய வானியற்பியல் நிறுவனம் நேரலை வழங்கியது.

புதுதில்லி, மும்பை, அகமதாபாத், போபால், ஆக்ரா, காந்திநகர் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த நிகழ்வு காணப்பட்டது. இருப்பினும், குஜராத்தின் துவாரகாவில் இக்காட்சி மிக அதிக காலத்திற்கு நீடித்தது.

வெறும் கண்களால் கிரகணமாகிய சூரியனைப் பார்க்க வேண்டாம் என்று இந்திய புவி அறிவியல் அமைச்சகம் வலியுறுத்தியது.

மேலும், அடுத்த முறை சூரிய கிரகணம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்டு 2ஆம் நாள் இந்தியாவில் காணப்படும். அது முழுமையான சூரிய கிரகணமாகும். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து பார்த்தால் அது பகுதியான சூரிய கிரகணமாக காணப்படும் என்றும் இவ்வமைச்சகம் தெரிவித்தது.