ஆப்பிரிக்காவில் சீன ஆவணத் திரைப்பட விழா தொடக்கம்
2022-10-26 21:37:41

சீன ஆவணத் திரைப்பட விழா 26ஆம் நாள் ஆப்பிரிக்காவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. அற்புதமான மனவுறுதி உள்ளிட்ட புதிய வளர்ச்சிப் பாதையில் சீனாவின் பயணம் பற்றிய செய்தி விளக்கத் திரைப்படங்களும் ஆவணத் திரைப்படங்களும் இவ்விழாவில் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வின் துவக்க விழாவில் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் காய்சியுங் கூறுகையில், பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றுக்கொள்வதானது ஒத்துழைப்புக்கும் கூட்டு வெற்றியைப் பெறுவதற்கும் துணை புரியும் என்று தெரிவித்தார்.

கேமரூன், கோட்டிவா, செனகல், அல்ஜீரியா முதலிய நாடுகளின் பண்பாடுத்துறை அமைச்சர்களும் தொலைக்காட்சி நிலையத் தலைவர்களும் இவ்விழாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த சுமார் 4 திங்கள் காலத்தில் சீன ஊடகக் குழுமமும் சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகமும் கூட்டாக நடத்தும் இந்நிகழ்வு 40க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 70 ஊடகங்களில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.