வளர்ச்சிக்கு தீர்வு திட்டத்தை வழங்கும் புதிய வளர்ச்சி வங்கி
2022-10-26 10:55:19

வளர்ச்சிக்கான நிதித் திரட்டலை விரிவாக்கி, தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவது என்ற தலைப்பில் புதிய வளர்ச்சி வங்கியும் சீன நிதி அமைச்சகமும் 25ஆம் நாள் கூட்டாக நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் 2022 முதல் 2026ஆம் ஆண்டு வரையில் புதிய வளர்ச்சி வங்கியின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.  இவ்வாண்டு மே திங்களில் புதிய வளர்ச்சி வங்கியின் செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டம், புதிய வளர்ச்சி சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளின் அடிப்படை வசதி ஆக்கப்பணிக்கும் தொடரவல்ல வளர்ச்சிக்கும் உதவி அளிக்கும்.

சீன நிதி அமைச்சரும் புதிய வளர்ச்சி வங்கியின் சீன இயக்குநர் லியு குன் கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில்,

பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, புதிய வளர்ச்சி வங்கியை 21ஆவது நூற்றாண்டில் புதிய ரக பலதரப்பு வளர்ச்சி நிறுவனமாக கட்டியமைத்து, பல்வேறு உறுப்பு நாடுகளின் தொடரவல்ல வளர்ச்சிக்கு ஆதரவளிக்க சீனா விரும்புகிறது.