பிரதேச ஒத்துழைப்பு மற்றும் தொடர்புக்கு AIIB வங்கி வேண்டுகோள்
2022-10-27 15:07:46

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 7ஆவது செயற்குழுவின் ஆண்டு கூட்டம் அக்டோபர் 26ஆம் நாள் காணொளி வழியில் நடைபெற்றது. இணைந்துள்ள உலகத்தை எதிர்நோக்கும் தொடரவல்ல உள்கட்டமைப்பு என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும். இவ்வங்கித் தலைவர் ஜின் லிச்சுன் கூறுகையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இயங்கத் தொடங்கிய கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 8500 அமெரிக்க டாலர் மதிப்புள்ள மூலதனத்தைத் திரட்டியுள்ளது என்றும், எதிர்காலத்தில் பிரதேச ஒத்துழைப்பு மற்றும் தொடர்பை ஊக்குவிக்கவும், பசுமை வளர்ச்சியை நனவாக்குவதில் உறுப்பினர்களுக்கு உதவியளிக்கவும் இவ்வங்கி செயல்படும் என்றும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தில் இவ்வங்கி கவனம் செலுத்தி வருகிறது. இது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனாவின் முயற்சிகளை ஜின் லிச்சுவான் பாராட்டினார். மேலும், கார்பன் வெளியேற்றக் குறைப்பு பற்றி சீனா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.