5ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் ஆயத்தப் பணி
2022-10-28 16:21:14

5ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், சர்வதேச கொள்வனவு, முதலீட்டு முன்னேற்றம், மனித தொடர்பு, திறந்த ஒத்துழைப்பு ஆகிய 4 தளங்களின் செயல்திறன்களைக் கொண்ட இப்பொருட்காட்சி, புதிய வளர்ச்சி கட்டமைப்பின் உருவாக்கம், உயர் நிலை திறப்பு, பலதரப்புவாதம் ஆகியவற்றுக்குத் துணை புரிகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீனாவில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச நிகழ்ச்சி, இப்பொருட்காட்சியாகும். இப்போது, தொழில் நிறுவனங்களின் பொருட்காட்சி, ஹுங்ச்சியாவ் கருத்தரங்கு, பல்வேறு நாடுகளின் பொருட்காட்சி, மனித பரிமாற்றம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான ஆயத்தப் பணி அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஷு யு டிங் 27ஆம் நாள் தெரிவித்தார்.