3ஆவது காலாண்டில் அமெரிக்காவின் GDP பற்றிய கணிப்பு
2022-10-28 15:06:37

அமெரிக்க வணிக அமைச்சகத்தின் பொருளாதார ஆய்வுப் பணியகம் அக்டோபர் 27ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் 3ஆவது காலாண்டில் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, ஆண்டுக்கான விகிதத்தில் கணக்கிட்டால் 2.6 விழுக்காடு அதிகரித்தது. முதன்முறை மதிப்பீட்டு மதிப்பாக, இது சரி செய்யப்படும்.

அமெரிக்கப் பொருளாதாரம் 3ஆவது காலாண்டில் வளர்ச்சியைக் கண்ட போதிலும், கடந்த 2 காலாண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவு, நுகர்வு செலவு மற்றும் வீட்டு நிலச் சொத்து சந்தையின் பலவீனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், அதன் பொருளாதார வீழ்ச்சியை இந்த அதிகரிப்பு குறைக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

சரி செய்யப்பட்ட இந்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் இறுதி முடிவு நவம்பர் 30ஆம் நாள் வெளியிடப்படும்.