பங்குச் சந்தையில் கடவுள் போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள்
2022-10-28 11:43:45

2016 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், சுமார் 12000 அமெரிக்க அரசு அதிகாரிகளின் நிதி வெளிப்பாட்டு அறிக்கையின்படி, அவர்களில் 20 விழுக்காட்டுக்கும் மேலானோர் கையில் கொண்டுள்ள அல்லது பரிமாற்றம் செய்த பங்குப் பத்திரங்களின் விலை, அவர்கள் சேர்ந்த வாரியங்களின் முடிவுடன் அதிகரிக்கவும் குறையவும் இருக்கும் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் நாளேட்டில் அண்மையில் வெளியான ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு மற்றும் பொது மக்கள் சந்திக்கும் நெருக்கடி, குறிப்பிட்ட சிலருக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாக அடிக்கடி திகழ்கிறது. அமெரிக்க அரசியல் துறையில் பங்குச் சந்தை கடவுள் போன்ற அதிகாரிகள் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சமூகத்தில் கடும் மனநிலைவின்மை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் சொந்த நலன்களை நாடு மற்றும் பொது மக்களின் நலன்களுக்கு மேலான நிலையில் வைத்துக் கொண்டுள்ளதால், பொது மக்கள் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

பங்குச் சந்தையில் அமெரிக்க அரசியல்வாதிகள் திரைக்குப் பின்னால் இருந்து மேற்கொண்ட வியாபாரம், அமைப்புமுறை சார் சீர்கேடு ஆகும். ஊழலில் வெளிப்படையாக ஈடுபட்ட அவர்களுக்குத் தண்டனை இல்லாத நிலைமை, அமெரிக்க அமைப்புமுறையின் செயலிழப்பு மற்றும் அதன் அரசியல் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது என்று அந்நாட்டின் அரசியல் அறிஞர் பிரான்சிஸ் ஃபுகுயாமா தூதாண்மை விவகாரங்கள் எனும் இதழில் கட்டுரை வெளியிட்டு சுட்டிக்காட்டினார்.