சீனாவுக்கான அமெரிக்க தூதர் பர்ன்ஸூடன் வாங்யீ சந்திப்பு
2022-10-29 18:17:13

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ சீனாவுக்கான அமெரிக்க தூதராகப் பதிதாகப் பதவியேற்ற நிசோலஸ் பர்ன்ஸை 28ஆம் நாள் சந்தித்து பேசினார்.

வாங்யீ கூறுகையில், சீன-அமெரிக்க உறவு முக்கிய தருணத்தில் இருக்கிறது. இரு நாட்டுறவின் நிலையான வளர்ச்சியைச் சர்வதேச சமூகம் பொதுவாக எதிர்பார்க்கிறது. இரண்டு பெரிய நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று மாற்ற முடியாது. சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முயல்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். சீனாவுக்கான அமெரிக்க தூதராக, நீங்கள் இரு நாடுகளிடையே பாலமாகப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் பெரும் கவனம் செலுத்தினேன். அமெரிக்க-சீன உறவு இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கும் மிக முக்கியமானது. சீனாவுடன் இணைந்து பரிமாற்றத்தை வலுப்படுத்தி கருத்து வேறுபாடுகளை உரிய முறையில் சமாளித்து ஒத்துழைப்பை முன்னேற்ற அமெரிக்கா விரும்புகிறது என்று பர்ன்ஸ் கூறினார்.