ஜெர்மனி தலைமையமைச்சரின் சீனப் பயணம்
2022-10-29 17:25:42

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெசியாங்கின் அழைப்பை ஏற்று, ஜெர்மனி தலைமையமைச்சர் ஓலாஃப் ஸ்கால்ஸ் நவம்பர் 4ஆம் நாள் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென் பின் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஜெர்மனியின் பல்வேறு துறையினர் இப்பயணத்தில் உயர்ந்த கவனம் செலுத்துகின்றனர். தலைமையமைச்சராக பதவி ஏற்ற ஓலாஃப் ஸ்கால்ஸின் முதலாவது  சீனப் பயணம், இரு நாடுகளுக்கிடையேயான பயனுள்ள ஒத்துழைப்பை முன்னேற்றலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.

வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த வணிக பிரமுகர்கள் கொண்ட பிரதிநிதிக் குழு, ஓலாஃப் ஸ்கால்ஸுடன் சேர்ந்து சீனாவுக்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.