துப்பாக்கி வன்முறையின் கீழ் உள்ள அமெரிக்க குழந்தைகள்
2022-10-29 20:03:57

இவ்வாண்டில் தற்போதுவரை அமெரிக்காவின் பள்ளிகளில் மொத்தம் 260 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரே ஆண்டில் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடுகளின் எண்ணிக்கை முன்பு காணாத பதிவு இதுவாகும் என்று அமெரிக்காவின் அரசு சாரா நிறுவனமான கே-12 பள்ளி துப்பாக்கி சூடு தரவுத்தளம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் இளம் வயதினர்களின் மனதில் துப்பாக்கி வன்முறையால் ஏற்படும் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. தற்போது, அந்நாட்டில் மனசோர்வினால் பாதிக்கப்பட்டுள்ள இளம் வயதினர்களின் சதவீதம் உயர்ந்து வருகிறது. படிப்பை விட சில மாணவர்கள் துப்பாக்கி வன்முறை மீது மேலும் அதிகமாக கவலைப்படுகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த துப்பாக்கி வன்முறை தீர்க்கப்பட முடியாது என்பதற்கு, அந்நாட்டின் அரசியல் அமைப்புமுறையில் உள்ள குறைபாடு முக்கிய காரணமாகும். அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கான இரண்டாவது திருத்தத்தில், துப்பாக்கி உரிமை தொடர்பான விதிகளை மாற்றுவது கடினம். மேலும், அமெரிக்காவின் இரண்டு கட்சிகளின் “வீட்டோ அதிகாரம்” போன்ற அரசியல் தந்திரத்துடன் தொடர்புடையது. தவிரவும், அமெரிக்காவில் தேசிய ரைஃபில் துப்பாக்கி சங்கம் போன்ற லாபம் பெறும் குழுக்களின் செயல்பாடு முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.