பறவைக் காய்ச்சல் பாதிப்பு
2022-10-29 17:24:13

இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரவலைத் தடுக்கும் வகையில், 28ஆம் நாள் முதல் இம்மாவட்டத்தில் 20ஆயிரத்துக்கும் மேலான பறவைகள் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.  

பறவைக் காய்ச்சலால் ஆலப்புழா மாவட்டத்தில் 1500க்கும் அதிகமான வாத்துக்கள் திடீரென உயிரிழந்தன. பாதிப்பு ஏற்பட்ட இடத்தை மையாக கொண்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்து பறவைகளும் அழிக்கப்பட வேண்டும். கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இறைச்சி மற்றும் முட்டை பொருட்களின் போக்குவரத்து மற்றும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது என்று உள்ளூர் தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தது.