தென்கொரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பலி
2022-10-30 16:49:15

தென் கொரிய தலைநகர் சியோலின் இதாவோன் பகுதியில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 151 பேர் உயிரிழந்தனர். மேலும் 82 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு தீயணைப்புத் துறை இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இன்று முதல் நவம்பர் 5ஆம் நாள் வரை உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று தென்கொரிய தலைமை அமைச்சர் அறிவித்தார்.