இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விடோடோ உடன் சிறப்பு நேர்காணல்
2022-10-30 20:43:19

இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விடோடோ கடந்த அக்டோபரின் தொடக்கத்தில் சீன ஊடக குழுமத்தின்‘தலைவர்கள் உரையாடல்’ எனும் நிகழ்ச்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

உள்கட்டமைப்புக் கட்டுமானம் குறித்து செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தபோது, ஜோகோ விடோடோ கூறுகையில்

உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதுடன், இந்தோனேசியாவின் போட்டித்திறன் உயரும். கடந்த 8 ஆண்டுகளில், 2040 கிலோமீட்டர் நீளமான உயர்வேக நெடுஞ்சாலையும் 16 புதிய விமான நிலையங்களையும் அமைத்துள்ளோம். 38 விமான நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், துறைமுகங்கள் மற்றும் அணைகள் ஆகியவை இதில் அடங்கும். இது, இந்தோனேசியா தனது போட்டித்திறனை மேம்படுத்துவதற்கான தேவையான அடிப்படை நிபந்தனையாகும் என்று நினைக்கிறேன். இந்தோனேசியாவின் உள்கட்டமைப்பு வசதிகளின் கட்டுமானம் பற்றி பேசுகையில், ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.  

2016ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் அதன் கட்டுமானம் தொடங்கப்பட்டது. அதற்கு பிறகு கிட்டதட்ட ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் அல்லது தொலைபேசி உரையாடலிலும் இரு நாட்டுத் தலைவர்கள் இந்த ரயில் பாதை பற்றி குறிப்பிட்டனர். இந்த பாதை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இரு பெரிய நகரங்களுக்கிடையே பயண நேரம், முன்பு 3 மணி நேரத்தில் இருந்து 40 நிமிடங்களுக்கு மட்டும் குறைக்கப்படும். இந்த அதிவேக ரயில் பாதை,  இந்தோனேசியாவும் சீனாவும் உள்கட்டமைப்பு வசதித் துறையில்  மேற்கொண்டுள்ள முக்கிய  செயல்திட்டமாகும். இந்த திட்டம் விரைவில் 2023ஆம் ஆண்டின் பாதியில் செயலுக்கு வரவுள்ளது என்று நம்பிக்கையுடன் மதிப்பிடுகிறேன். இந்த அதிவேக ரயில் பாதை, ஜகார்த்தா-பாண்டுங்  இடையேயான தொடர்பை மேம்படுத்தவும்,  மக்களின் பயணம் மற்றும் சரக்குப் போக்குவரத்தை வேகப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.