பிரிட்டனின் இயற்கை எரிவாயு கையிருப்பு 9 நாட்களுக்கு மட்டும் போதும்
2022-10-30 20:12:18

பிரிட்டனின் இயற்கை எரிவாயு கையிருப்பு அளவு, 9நாட்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும் என்று பிரிட்டன் இயற்கை எரிவாயு நிறுவனம் அக்டோபர் 28ஆம் நாள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டின் நாளிதழ் “தி மிரர்” தனது இணையதளத்தில் தெரிவித்தது.

தற்போது, இயற்கை எரிவாயு கையிருப்பை பயன்படுத்தும் மொத்த நாட்கள் அதிகபட்சமாக, ஜெர்மனிக்கு 89ஆகவும், பிரான்ஸுக்கு 103ஆகவும், நெதர்லாந்துக்கு 123ஆகவும் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனின் இயற்கை எரிவாயு கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டின் குளிர்காலத்தில் இயற்கை எரிவாயு பற்றாக்குறையாக இருந்தால், இதை எதிர்கொள்வதற்கான ”மூன்று மணிநேர மின்வெட்டு” என்ற நிலையை பிரிட்டன் மக்கள் எதிர்கொள்ள வாய்ப்புண்டு. ஆனால், இத்திட்டம் அமலுக்கு வரும் சாத்தியம் மிகவும் குறைவு என்று பிரிட்டன் தேசிய மின் இணைப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.