உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு கத்தார் தயாராக இருக்கிறது
2022-10-30 20:13:49

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் நவம்பர் 20முதல் டிசம்பர் 18ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை சிறப்பாக வரவேற்கும் விதமாக, விளையட்டு அரங்கு, பயிற்சி மைதானம், சுரங்க இருப்புப் பாதை, ஹோட்டல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. போக்குவரத்து, பாதுகாப்பு, உபசரணை ஆகிய துறைகள் தயார் நிலையில் இருக்கிறது.

உலக கோப்பை போட்டியின்போது, சுமார் 13இலட்சம் கால்ந்து ரசிகர்கள் கத்தாருக்கு வருவர். இது, அந்நாட்டின் தற்போதைய மக்கள் தொகையில் ஒரு பாதிக்கு சமமாக இருக்கும் என்று கத்தார் தெரிவித்தது.

தவிர, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் விதமாக, கத்தார், பாகிஸ்தான், துருக்கி முதலிய நாடுகளுடன் உடன்படிக்கையில் கையொப்பமிட்டு, அந்த நாடுகள் கத்தாருக்கு அனுப்பவிருக்கும் காவற்துறையினர்கள் இராணுவ வீரர்கள் ஆகியோர் சர்வதேச பாதுகாப்பு அணியை அமைப்பார்கள்.