தனது சீனப் பயணம் பாகிஸ்தான்-சீன நட்புறவின் ஆழத்தை வெளிகாட்டியுள்ளது: ஷெரீஃப்
2022-10-30 17:28:15

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷாபாஸ் ஷெரீஃப் நவம்பர் முதல் நாள் தொடங்கி சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். தனது சீனப் பயணத்தை முன்னிட்டு, அவர் இஸ்லாமாபாத்தில் சீன ஊடக குழுமம் உள்ளிட்ட சீன செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

இந்தச் சீனப் பயணம் பாகிஸ்தான்-சீன நட்புறவின் ஆழத்தை வெளிக்காட்டியுள்ளது. இப்பயணம் மூலம், பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் மேலும் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்ப்பதாக ஷெரீஃப் பேட்டியில் தெரிவித்தார்.