சோமாலியா தலைநகரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா.வின் தலைவர் கண்டனம்
2022-10-31 10:58:14

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சனிக்கிழமை நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டிப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்த கொடூரமான தாக்குதல்களைக் கடுமையாக கண்டித்து, வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக சோமாலியாவுடன் ஐ.நா பாதுகாப்பவை ஒற்றுமையாக நிற்கிறது என்றும், அமைதியான மற்றும் வளமான சோமாலியாவிற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் குட்டரெஸ் உறுதியளித்தார் என்று ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்.

சோமாலியாவின் கல்வி அமைச்சகத்தின் கட்டிடத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரட்டை கார் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என 

சோமாலிய அதிபர் ஹசன் ஷேக் முகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.