விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட மெங்தியான் விண்கலம்
2022-10-31 16:41:29

சீன விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த முக்கிய பகுதியாக, மெங்தியான் விண்கலம் திங்கள்கிழமை மாலையில் ஏவூர்தி மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சுமார் 23 டன்  சுமையை ஏற்றி செல்லும் இந்த விண்கலம் திட்டமிடப்பட்ட சுற்றுப் வட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த கட்டம்,  விண்வெளி நிலையத்துடன் ஒன்றாக இணைய உள்ளது.

மெங்தியான் விண்கலம், சீன விண்வெளி நிலையத்தின் 3ஆவது விண்கலமாகவும், 2ஆவது அறிவியல் ஆய்வு விண்கலமாகவும் திகழ்கிறது.