சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்
2022-10-31 17:31:46

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ அழைப்பையேற்று 31ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தற்போதைய மற்றும் அடுத்த கட்ட இரு நாட்டுறவு பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

உலக அமைதியைப் பேணிகாத்து கூட்டு வளர்ச்சியை மேம்படுத்தும் தூதாண்மைக் கொள்கையைச் சீனா பின்பற்றி வருகிறது என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் வழங்கிய முக்கிய தகவலாகும். சீன-அமெரிக்க உறவை நிலையான வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் திரும்பச் செய்வது இரு நாட்டின் கூட்டு நலன்களுக்கு பொருத்தமானது. சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்பு அதுவாகும். சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் செயலை அமெரிக்கா நிறுத்த வேண்டும். இரு நாட்டுறவுக்கு புதிய தடையை உருவாக்க வேண்டாம் என்று வாங்யீ குறிப்பிட்டார்.