சீனாவில் மகளிர் உரிமை நலன்களைப் பேணிக்காப்பதற்கான சட்டத் திருத்தம்
2022-10-31 16:22:44

மகளிர் உரிமை நலன்களைப் பேணிக்காப்பதற்கான சட்டத் திருத்தம் அக்டோபர் 30ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதிய யுகத்தில் மகளிர் வேலைகளின் தனிச்சிறப்பு, மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்கான தேவை ஆகியவற்றுக்கிணங்க, மகளிர் உரிமை நலன்கள் இச்சட்டத் திருத்தத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வேலை வாய்ப்புத் துறையில் பாலினப் பாகுபாடு, தொழிலாளர் பாதுகாப்புக்கான கண்காணிப்பில் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

தவிரவும், மகளிரின் அரசியல் உரிமை, சொத்து உரிமை, மீட்புதவி நடவடிக்கை முதலியவற்றை மேம்படுத்துவதற்கான சிறப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

புதிதாகத் திருத்தப்பட்ட இச்சட்டம் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அமலாக்கப்படும்.