நிலைமை தணிவுக்காக மேலை நாடுகளின் ஆலோசனைகளைக் கேட்டறிய ரஷியா விருப்பம்
2022-10-31 10:31:16

ரஷிய அரசுத் தலைவர் புதின் உள்ளிட்ட ரஷியத் தலைவர்கள், உக்ரைன் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர். நிலைமை தணிவுக்காக, மேலை நாடுகள் முன்வைத்த ஆலோசனைகளைக் கேட்டறியவும் ரஷியா விரும்புகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ராவ்ரோவ் 30ஆம் நாள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ரஷியாவின் கருங்கடல் போர் கப்பல் படையின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் வழிகாட்டியதாகவும், நோர்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாயைச் சீர்குலைப்பதில் பிரிட்டன் படைகள் ஈடுபட்டதாகவும் ரஷியா கூறியதை, பிரிட்டன் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் 29ஆம் நாள் மறுத்துள்ளது. முன்னென்றும் கண்டிராத அளவில் பொய் தகவல்களை, ரஷியா பரப்பி வருகிறது என்று பிரிட்டன் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியது.