விண்வெளித் துறையில் சீனாவின் சாதனை
2022-11-01 11:26:10

சீனாவின் மெங்தியான் ஆய்வுக் கலம் அக்டோபர் 31ஆம் நாள் பிற்பகல் விண்ணில் ஏவப்பட்டது. சீனாவின் விண்வெளி நிலையத்துக்கான சுற்றுப்பாதையிலுள்ள கட்டுமானம் விரைவில் முடிவடையும் என்பதை இது காட்டுகிறது.

1992ஆம் ஆண்டு, சீனாவில் மனிதரை ஏற்றிச்சென்ற விண்வெளித் திட்டப்பணி அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்பட்டது முதல், 2022ஆம் ஆண்டு சுற்றுப்பாதையிலுள்ள கட்டுமானம் நிறைவுப் பெறுவது வரை, சீன மக்கள் 30 ஆண்டுகால முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில், சீனாவில் 274 ஏவுதல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்வெளி வல்லரசுகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது.

மேலும், அமைதிப் பயன்பாடு, சமத்துவ முறையில் ஒன்றுக்கொன்று நலன் தருவது, கூட்டு வளர்ச்சி ஆகிய கோட்பாடுகளில், சீனாவின் மனிதரை ஏற்றிச்சென்ற விண்வெளித் துறை எப்போதுமே ஊன்றி நின்று வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷியா, பாகிஸ்தான், விண்வெளி விவகாரங்களுக்கான ஐ.நாஅலுவலகம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் சீனா ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளது.

மனித குலம் விண்வெளிப் பகுதியை ஆய்வு செய்வதற்கான புதிய வீடாக, சீன விண்வெளி நிலையம் விளங்குகிறது. எதிர்காலத்தில், சீனா மற்றும் வெளிநாட்டு விண்வெளிவீரர்கள் இந்நிலையத்தில் கூட்டாக வேலை செய்து, விண்வெளிக்கான அமைதிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்குப் பங்காற்றுவர் என்று நம்புகின்றோம்.