இலங்கையில் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
2022-11-01 14:22:44

இலங்கையின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் திங்கட்கிழமை எச்சரித்துள்ளது.

கேகாலே,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வசிப்பவர்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மண்சரிவு எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை காலை வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை 75 மில்லிலிட்டர் கனமழை பெய்துள்ளதால், மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.