ரஷிய-சீனச் சர்வதேசக் கருத்தரங்கிற்கு வாங் யீ வாழ்த்து
2022-11-01 16:52:55

ரஷிய-சீன உறவுகளை நிறுவுவது, மீட்டமைப்பது மற்றும் வளர்ப்பதில் அரசு சாரா தூதாண்மையின் பங்கு குறித்த சர்வதேசக் கருத்தரங்கை ரஷிய-சீன நட்புறவு சங்கம் அக்டோபர் 31ஆம் நாள் மாஸ்கோவில் நடத்தியது. இதற்குச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வாழ்த்து செய்தி அனுப்பினார்.

ரஷிய-சீன நட்புறவு சங்கமும் இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வட்டாரத்தினரும் இரு தரப்புகளுக்குமிடையிலான நட்பார்ந்த அரசு சாரா தொடர்பைத் தொடர்ந்து முன்னேற்றி, பல தலைமுறை நட்புறவுக்கு மேலும் உறுதியான சமூக அடிப்படையை உருவாக்க வேண்டும் என்று வாங் யீ விருப்பம் தெரிவித்தார்.

மேலும், ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும் இதற்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.