மாண்டினீக்ரோ அரசு தலைவருக்கான சிறப்பு போட்டி
2022-11-01 16:07:44

பார்-போல்ஜாரே உயர்வேக நெடுஞ்சாலை சீனா மற்றும் மாண்டினீக்ரோவின் முக்கிய ஒத்துழைப்புத் திட்டப்பணிகளில் ஒன்றாகும். ஆனால் சீனாவின் “கடன் பொறி” இதுவாகுமென அண்மையில் சில மேற்கத்திய செய்தி ஊடகங்கள் விமர்சித்தன. இது குறித்து மாண்டினீக்ரோவின் அரசுத் தலைவர் மிலோ ஜூகானோவிக் சீன ஊடக குழுமத்தின் “தலைவர்கள் உரையாடல்” என்ற நிகழ்ச்சியில் குறிப்பிடுகையில், இந்த கூற்றுகளால் மனம் அசையவில்லை. நாட்டின் நலன்களுக்குப் பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன் இந்த உயர்வேக நெடுஞ்சாலையை நாங்கள் கட்டியமைத்துள்ளோம். அப்போது ஐரோப்பிய முதலீடு வங்கி, துருக்கி நிதிக்குழு, அமெரிக்கா மற்றும் துருக்கி கூட்டு முதலீடு கொண்ட கட்டிடத் தொழில் நிறுவனம் ஆகியவை இந்த திட்டத்துக்குப் போட்டியிட்டன. ஜெர்மனி நிறுவனமும் ஆர்வம் காட்டியது. வெளிப்படையாக செயல்பட்டு மதிப்பீடு செய்த பிறகு, சீன நிறுவனம் வழங்கிய தீர்வுத் திட்டம் அவற்றில் மிகவும் சிறந்தது. அத்துடன், சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி நல்ல சலுகையுடன் நிதி ஆதரவை வழங்க விரும்பியது என்று மிலோ ஜூகானோவிக் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பார்-போல்ஜாரே உயர்வேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் மிக சிக்கலான மிக அதிக செலவான பகுதியின் கட்டுமானம் நிறைவேற்றப்பட்டதாக நான் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். எனது இந்த தேர்வை நம்புகிறேன். இந்த முடிவை உறுதியாக பேணிக்காக்கிறேன் எந்றும் கூறினார்.

பார்-போல்ஜாரே உயர்வேக நெடுஞ்சாலை மாண்டினீக்ரோவின் போக்குவரத்து பாதுகாப்பை உயர்த்தலாம். தெற்கு மற்றும் வடக்கிடையே உள்ள பயண நேரத்தை பெரிதும் குறைத்து மாண்டினீக்ரோவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றும். பயணிகளின் வருகையையும் வர்த்தக செயல்பாடுகளையும் பயனுள்ளதாக அதிகரித்துள்ளது. இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானம், மாண்டினீக்ரோவில் மதிப்பு மிக்க உள்கட்டமைப்பு திட்டப்பணியாகும் என்பதில் சந்தேகம் இல்லை. எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அடிப்படையாக அது உருவாக்கும் என்று ஜூகானோவிக் கூறினார்.