மெங்தியான் ஆய்வுக் கலம் தியான்ஹே மையக் கலத்துடன் இணைப்பு
2022-11-01 10:48:20

சீனாவின் மெங்தியான் என்னும் விண்வெளி ஆய்வுக் கலம், நவம்பர் முதல் நாள் அதிகாலை 4:27 மணிக்கு, தியான்ஹே மையக் கலத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. இதையடுத்து, மெங்தியான் ஆய்வு கலம், தியான்ஹே மையக் கலம், வென்தியான் ஆய்வுக் கலம் ஆகியவை, T வடிவிலான விண்வெளி நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.