ஜெர்மனித் தலைமை அமைச்சர் ஸ்கோல்ஸின் முதலாவது சீனப் பயணம்
2022-11-01 19:52:48

ஜெர்மனித் தலைமை அமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நவம்பர் 4ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நவம்பர் 1ஆம் நாள் தெரிவித்தார்.  

கோவிட்-19 பரவலுக்குப் பின்பு, ஐரோப்பிய நாட்டுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். ஸ்கோல்ஸ் ஜெர்மனி தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பிந்தைய முதலாவது சீனப் பயணமும் இதுவாகும். இப்பயணம் புதிய யுகத்தில் சீன-ஜெர்மனி உறவின் வளர்ச்சிக்குப் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வருமென நம்புவதாக ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.