ஆக்டோபரில் வலுவான விற்பனையைக் கண்ட இந்திய வாகன நிறுவனங்கள்
2022-11-02 10:17:27

இந்திய வாகன நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் வலுவான விற்பனையைப் பதிவு செய்துள்ளதாக, பங்குச் சந்தைகளில் பெருநிறுவனங்கள் தாக்கல் செய்த தரவுகள் காட்டுகின்றன.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், இம்மாதத்தில் 32,226 எஸ்யூவி வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இவ்விற்பனை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 61 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம், இம்மாதத்தில் 120,960 கார்களை விற்பனை செய்துள்ளது. இவ்விற்பனை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 21 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இம்மாதத்தில் 45,217 கார்களை விற்பனை செய்துள்ளது. இவ்விற்பனை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 33 விழுக்காடு அதிகரித்துள்ளது.