சீனா மற்றும் வியட்நாமின் நட்புறவு
2022-11-02 10:20:08

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்கின்  அழைப்பின் பேரில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ங்யென் பு ட்ராங் அக்டோபர் 30ஆம் நாள் முதல் நவம்பர் 2ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். புதிய காலத்தில் சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவைப் புதிய கட்டத்துக்குத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒருமனதாக தெரிவித்தனர்.

சொந்த தேசிய நிலைமைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப் பாதையைச் சீனா, வியட்நாம் முதலிய சோஷலிச நாடுகள் வெற்றிகரமாக ஆராய்ந்து,  வளரும் நாடுகளுக்குப் பயனுள்ள அனுபவங்களை வழங்கி, மனிதர் முன்னேற்ற இலட்சியத்துக்கு ஆக்கபூர்வமாகப் பங்காற்றியுள்ளன என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

சீனாவும் வியட்நாமும் முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக் கூட்டாளி நாடுகளாகும். 2021ஆம் ஆண்டில் இரு தரப்புகளின் வர்த்தகத் தொகை, 23 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.

இரு தரப்புகளின் முக்கிய நலன் மற்றும் கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளித்து, பலதரப்புவாதத்தையும் சர்வதேச நேர்மையையும் நீதியையும் இரு நாடுகள் கூட்டாகப் பேணிகாக்க வேண்டும். ஒரே சீனா என்ற கொள்கையை ங்யென் பு ட்ராங் பேச்சுவார்த்தையில் மீண்டும் வலியுறுத்தினார். இது, சீனாவின் மீதான உறுதியான ஆதரவுகளை மீண்டும் காட்டுகின்றது.