சீன-பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு
2022-11-02 11:39:00

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நவம்பர் முதல் நாள் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கொலுன்னாவுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

வாங் யீ, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் முக்கிய சாதனைகள் மற்றும் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தினார். இம்மாநாட்டில் உறுதி செய்யப்பட்ட சீன வளர்ச்சி திட்டமும், சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளும், இக்கொந்தளிப்பான உலகிற்கு உறுதித்தன்மையை ஊட்டி, சர்வதேசச் சவால்களைச் சமாளிப்பதற்கு ஆக்கமுள்ள சக்தியை வழங்கும் என்றும் வாங் யீ தெரிவித்தார்.

சீனாவுடன் இணைந்து பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, உலக அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க பிரான்ஸ் விரும்புவதாக கொலுன்னா தெரிவித்தார்.

இரு தரப்பினரும் உக்ரைன் பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.