இந்தியாவின் உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு : 55.3
2022-11-02 10:46:10

இந்தியாவின் உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு செப்டம்பரில் 55.1 இல் இருந்து அக்டோபரில் 55.3 ஆக உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகளின் விரிவாக்க நடவடிக்கைகள், தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு வழிவகுத்தது இவ்வுயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

எஸ்&பி உலகளாவிய சந்தை நுண்ணறிவு நிறுவனம் தொகுத்துள்ள இந்த குறியீடு, 16வது மாத முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, அக்டோபர் மாதத்தில் 50-க்கும் மேல் இருந்தது.

"அக்டோபர் மாதத்தில் இந்திய உற்பத்தித் துறை அதன் வளர்ச்சி வேகத்தை இழந்த போதிலும், தொழிற்சாலைகளின் முன்பதிவுகள் மற்றும் உற்பத்தி வலுவாக உயர்ந்து, மீட்டெழுச்சிக்கான அறிகுறிகளைக் காட்டியது" என்று எஸ்&பி உலகளாவிய சந்தை நுண்ணறிவு நிறுவனத்தின் பொருளாதார இணை இயக்குநர் பொல்லின்னா டி லிமா கூறினார்.