ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21வது தலைவர்கள் செயற்குழு கூட்டம்
2022-11-02 11:41:52

சீன தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் நவம்பர் முதல் நாள் பெய்ஜிங்கில் காணொளி வழியாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21வது தலைவர்கள் செயற்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

இவ்வமைப்பின் ஒத்துழைப்பை முன்னெடுப்பது குறித்து, லீக்கெச்சியாங் 5 அம்ச முன்மொழிவுகளை முன்வைத்தார். முதலாவதாக, பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்து, சீரான வளர்ச்சி சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, பிராந்திய பொருளாதார மீட்சியை முன்னேற்ற வேண்டும். மூன்றாவதாக, தொழில் சங்கிலியின் உறுதி மற்றும் நிலையான தன்மையைப் பேணிக்காக்க வேண்டும். நான்காவதாக, தானியம் மற்றும் எரியாற்றல் விநியோகத்துக்கான உத்தரவாதத்தை வலுப்படுத்த வேண்டும். ஐந்தாவதாக, மானிடப் பண்பாட்டுத் தொடர்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பங்கெடுத்த பல்வேறு தரப்பினர்கள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு துறைகளின் முன்னேற்றங்களைப் பாராட்டி, தானியம், எரியாற்றல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் முதலிய சவால்களைக் கூட்டாகச் சமாளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.