சீனாவின் உள்விவகாரங்களில் தலையீடுகளுக்கு எதிர்ப்பு
2022-11-02 16:06:35

ஐ.நா. பொதுப் பேரவையில் 31ஆம் நாள் திங்கள்கிழமை நடைபெற்ற 3ஆவது குழுக் கூட்டத்தில் சீனாவின் மீது அவதூறு பரப்ப அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் முயன்றன. ஐ.நா.வின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் சீனாவுக்கு ஆதரவு அளித்ததோடு,  மனித உரிமையைக் காரணமாகக் கொண்டு சீனாவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளன.

சின்ஜியாங், ஹாங்காங் மற்றும் திபெத் விவகாரங்கள், சீனாவின் உள்விவகாரங்களாகும். மனித உரிமைப் பிரச்சினையை அரசியலாக்கி இரட்டை நிலைப்பாடு எடுப்பதையும் மனித உரிமையைக் காரணமாகக் கொண்டு சீன உள்விவகாரங்களில் தலையிடுவதையும் எதிர்ப்பதாக கியூபா உள்ளிட்ட 66  நாடுகள் வெளியிட்ட கூட்டு உரையில் தெரிவித்தன. சர்வதேச சமூகம் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். மனித உரிமைப் பாதுகாப்பைக் கூட்டாக மேம்படுத்த வேண்டும் என்றும் உரையில் வலியுறுத்தப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லீஜியன் நவம்பர் 1ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சர்வதேச சமூகம், குறிப்பாக பரந்தப்பட்ட வளரும் நாடுகள் மனித உரிமையை அரசியலாக்குவதை எதிர்த்துள்ளன. குறிப்பிட்ட சில மேற்கத்திய நாடுகள், சின்ஜியாங் உள்ளிட்ட விவகாரங்களைக் காரணமாகக் கொண்டு சீனாவின் மீது  அவதூறு பரப்பி வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சி தோல்வி அடையும் என்றார்.