சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
2022-11-03 15:40:53

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நவம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலவாலைச் சந்தித்துரையாடினார்.

பிலவால் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆம் தேசிய மாநாட்டில் வகுக்கப்பட்ட வளர்ச்சித் திட்டம், உலக அமைதி மற்றும் வளர்ச்சி முன்னேற்றத்தில் வலுவான உந்தி சக்தியை ஊட்டும் என்று தெரிவித்தார்.

வாங் யீ கூறுகையில், சீனாவின் வளர்ச்சி, நிலையான உலகத்துக்கு முக்கிய காரணியாகும். சீன-பாகிஸ்தான் உறவு, புதிய உந்து விசையைப் பெற்று, புதிய கட்டத்தில் காலடியெடுத்து வைக்கும் என்று தெரிவித்தார்.