சீன-பாகிஸ்தான் நட்புக்குப் புதிய உந்து ஆற்றல்
2022-11-03 19:48:27

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவில் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் சந்தித்துரையாடினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின், சீனாவுக்கு வருகை புரிந்த வெளிநாட்டுத் தலைவர்களில் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷாபாஸ் ஷெரீஃப் ஒருவராவார். நீண்டகால வரலாறுடைய சீன-பாகிஸ்தான் நட்புறவு, நெடுநோக்கு ரீதியில் ஒன்றொன்று நம்பிக்கை மற்றும் பரந்துபட்ட ஒத்த கருத்துக்களை ஷெரீஃப்  மற்றும் ஷிச்சின்பிங்கின் சந்திப்பு எடுத்துக்காட்டியுள்ளது. புதிய யுகத்தில் சீன-பாகிஸ்தான் உறவின் வளர்ச்சிக்கு தெளிவான வழிகாட்டலை வழங்கியுள்ளது.

வெள்ளப்பெருக்குக்குப் பிந்தைய பாகிஸ்தானின் மறுசீரமைப்புக்கு உதவியளிக்க, மேலதிக நிவாரண உதவிகளை சீனா தொடர்ந்து வழங்குவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

உயர் தரமான வெளிநாட்டுத் திறப்பை முன்னேற்றி ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தரமான வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என 20ஆவது தேசிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தற்போது, சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதைக்கான மொத்த முதலீடு 2500கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. பாகிஸ்தானுக்கு ஒரு லட்சத்து 50ஆயிரம் வேலை வாய்ப்புகள் நேரடியாக கிடைத்துள்ளன.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம், வர்த்தகம் மற்றும் முதலீடு, மக்கள் தொடர்பு மற்றும் பண்பாடு உள்ளிட்ட பல துறைகளில் சீனாவும் பாகிஸ்தானும் பரந்துபட்ட ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளதாக 2ஆம் நாள் இரு தரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மின்னணு வணிகம், எண்முறை பொருளாதாரம், வேளாண் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி, நிதி ஒத்துழைப்பு, தொல்பொருள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதி முதலிய பத்து துறைகளில் இரு தரப்பும் பல உடன்படிக்கை அல்லது குறிப்பாணைகளில் கையொப்பமிட்டன. இவை, சீன-பாகிஸ்தானிடையேயான ஒத்துழைப்புக்குப் புதிய உந்து ஆற்றலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.