மெங்தியான் விண்வெளி ஆய்வுக் கலத்தை அடைந்த விண்வெளி வீரர் குழு
2022-11-03 18:37:27

ஷென் சோ-14 விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் குழு வெற்றிகரமாக மெங்தியான் விண்வெளி ஆய்வுக் கலத்திற்குள் நவம்பர் 3ஆம் நாள் பிற்பகல் நுழைந்துள்ளது என்று சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்ட அலுவலகம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, தியன் சோ-5 எனும் சரக்கு விண்கலம், ஷென் சோ-15 எனும் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்கலம் ஆகியவை முறையே மெங்தியான் விண்வெளி ஆய்வுக் கலத்துடன் இணையும். அப்போது, ஷென் சோ-15 விண்கலத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள், ஷென் சோ-14 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுக்கு பதிலாக விண்வெளி ஆய்வுக் கலத்தில் தொடர்ந்து பணியாற்றுவர். விண்வெளி வீரர்கள் குழுக்கள் இரண்டும் பணி பரிமாற்றம் விண்வெளியில் மேற்கொள்ளப்படுவது சீனாவின் விண்வெளி பயண வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.