எண்ம ரூபாய் நவம்பரில் சில்லறை பான்பாட்டுக்கு வரும்
2022-11-03 14:46:08

இத்திங்களின் பிற்பாதியில் சில்லறைத் துறையில் டிஜிட்டல் நாணயம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படும் என இந்திய மத்திய வங்கியின் இயக்குநர் சக்திகந்தா டாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.

அதற்காக சில நாட்களுக்கு முன் இந்திய ரிசர்வு வங்கி சோதனை ரீதியான பணி மேற்கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்களில் அரசாங்க பத்திரங்கள் தொடர்பான இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகளை தீர்க்க டிஜிட்டல் நாணயத்தைப் பயன்படுத்த அனுமதித்தது.

டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் இந்திய பணம் மற்றும் நாணய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மைற்கல்லாகும் என்று டாஸ் ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்.

சோதனை பணி சுமூகமாக இயங்கினால், டிஜிட்டல் நாணயம் 2023ஆம் ஆண்டில் நாடளவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.